2 வயதில் காணாமல் போன மகனை கண்டுபிடிக்க பிச்சையெடுத்த தந்தை.. 24 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!

2 வயதில் காணாமல் போன தனது மகனை கண்டுபிடிக்க பிச்சையெடுத்து பணம் சேர்த்த தந்தையின் பாசத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கிடைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
கடந்த 1997-ம் ஆண்டு குவோ கேங்டாங் என்பவரது 2 வயது மகன் காணாமல் போனான். தனது மகனை தேடி மோட்டர் சைக்கிளில் கிட்டத்தட்ட 20மாகாணங்களில் 5லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை தேடி அலைந்த அவர், பணம் தீர்ந்த போதும் முயற்சியை கைவிடாமல் பிச்சையெடுத்துள்ளார்.
உடல்ரீதியாக பிரச்சனைகள் வந்தபோதும் தனது தேடலை நிறுத்தாத அவரது முயற்சிக்கு பலனாக கடத்தப்பட்ட அவரது மகன் மீண்டும் கிடைத்துள்ளான்.
Author: admin