இந்த நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு, இறைவனிடம் வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்காது.

கோவிலுக்கு செல்லும் போது கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது, நல்ல விசேஷ நாட்களில் கருப்பு நிற ஆடையை அணிய கூடாது, வீட்டில் சாமி கும்பிடும் போது கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது, என்று இப்படி எல்லாம் நிச்சயமாக நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். ஆனால், நாம் என்ன செய்வோம்? நிறத்தில் என்ன வேறுபாடு உள்ளது. எல்லா வண்ணமும் ஒரே வண்ணம் தான். என்று சொல்லிவிட்டு, அவர்கள் சொல்வதற்கு முரணாகத் தான் சில விஷயங்களை நாம் செய்வோம். சாஸ்திர சம்பிரதாயங்களை மதிக்கவே மாட்டோம்.

அதாவது பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள் என்று வரும் போது குறிப்பாக அந்த கருப்பு நிற ஆடையை வாங்கிப் போட்டுக் கொண்டு, பிரச்சனைகளை எடுத்து நம் தலை மேல் போட்டுக் கொள்வோம். கேட்டால் சிலர் இதுதான் பேஷன். இதுதான் ஸ்டைல் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த கருப்பு நிறத்திற்கு பின்னால் எத்தனை பாதிப்புகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.

முழு கருப்பு நிறத்தில் சட்டையையோ அல்லது முழு கருப்பு நிறத்தில் புடவை அல்லது சுடிதார் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்யக் கூடாது. வீட்டில் இருந்தபடியேயும் இறைவனுக்கு வழிபாடு செய்யக் கூடாது. அதன் மூலம் நமக்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது. கருப்பு என்பது துக்கத்தை நினைவு படுத்த கூடிய ஒரு நிறம். துக்கம் நடக்கும் வீட்டில் தான் கருப்பு நிறம் பயன்படுத்தப்படும். இருட்டின் நிறம் கருப்பு. அதோடு மட்டுமல்லாமல் அந்த சனி பகவானுக்கு உரிய நிறம் இந்த கருப்பு.

முழுமையாக கருப்பு நிறத்தில் இருக்க கூடிய ஆடையை அணிந்து கொண்டு கோவிலுக்கு செல்லும்போது கோவிலில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலும், உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய கருப்பு நிற எதிர்மறை ஆற்றலும் சேரும்போது, எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடும். சில நிறங்கள் சில வகையான ஆற்றல்களை வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கின்றது.

பச்சை நிறத்தை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நம்முடைய மனது அமைதியாக இருப்பதற்கும், சிவப்பு நிறத்தை பார்க்கும் போது நம்மை அறியாமலேயே நம்முடைய மனம் கோபப்படுவதற்கு காரணமில்லாமல் இல்லை. எல்லா நிறத்திற்கு பின்னும் ஒரு குணாதிசயம் உள்ளது. இதன் அடிப்படையில் இந்த கருப்பு நிறத்திற்கு பின்னால் அடங்கியிருப்பது துக்கமும் கஷ்டமும் தான்.

ஆகவே இனி இறை வழிபாடு செய்யும் போது வீட்டில் உள்ள பெரியவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, கருப்பு நிற உடை அணியாமல் இருப்பது தான் நல்லது. மீறி அணிந்தால் என்ன நடக்கும். எதிர்மறை ஆற்றலின் மூலம் மன குழப்பம் ஏற்படும். நாம் இறைவனிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடும். தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கருப்பு நிற வஸ்திரமானது கோவிலுக்குள் செல்வதாக இருந்தால் அது சனிபகவானுக்கு தானம் கொடுக்கக்கூடியதாக மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய உடலில் முழு கருப்பு நிற உடை இருக்கவே கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin