3-வது நாளாக தங்கம் விலை உயர்வு: கிராம் ரூ.4,531-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4,531 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.36,056க்கு விற்பனையானது. செவ்வாய்கிழமையான நேற்றும் தங்கம் விலை அதிகரித்து ரூ.36,144க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,531-க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.104 உயர்ந்து 36,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,900க்கும் விற்பனையாகிறது.

Author: sivapriya