ட்விட்டர் கணக்கு பின்னணி விவரங்களை கேட்பதில் இந்தியா முதலிடம்

ட்விட்டர் கணக்குகளின் பின்னணி விவரங்களை கேட்டதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தங்கள் செயல்பாடுகள் குறித்த வெளிப்படைத்தன்மை அறிக்கையை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் ட்விட்டரில் பதிவிட்டோர் விவரங்களை கேட்ட உலக நாடுகளின் அரசுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் 25 சதவிகித கோரிக்கைகள் இந்திய அரசிடம் இருந்து மட்டுமே வந்திருப்பதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க சட்ட ரீதியாக கோரிக்கை வைத்த நாடுகளில் ஜப்பான் முதலிடத்திலும் இந்தியா 2ஆவது இடத்திலும் இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

Author: sivapriya