இந்திய ராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்ற மேலும் 147 பெண்களுக்கு அனுமதி

(கோப்பு புகைப்படம்)

இந்திய ராணுவத்தில் நீண்ட கால சேவையில் ஈடுபட மேலும் 147 பெண் அதிகாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் வரை பணியாற்றும் குறுகிய கால வாய்ப்பு மட்டுமே கடந்தாண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆண் அதிகாரிகள்போல் ஓய்வு பெறும் வயது வரை நீண்டகால பணியில் இருக்க தங்களையும் அனுமதிக்க உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் பெண் அதிகாரிகள் சிலர் வழக்கு தொடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்தது.

image

இதைத்தொடர்ந்து பல பெண் அதிகாரிகள் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நிலையில் இப்பட்டியலில் தற்போது மேலும் 147 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ராணுவத்தில் பாலின சமத்துவம் அதிகரித்துள்ளதாகவும், ஆண் அதிகாரிகள் சந்திக்கும் சவாலான பணிகளை பெண் அதிகாரிகளும் எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Author: sivapriya