ககன்யான் திட்டம்: இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்திற்கான இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்ணில் செலுத்தப்பட இருக்கும் GSLV MK III விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது. 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய கவுன்ட்டவுன் தொடங்கி பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Author: sivapriya