வரலாற்றில் இன்று

•622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும்.
•997 – கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர்.
•1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.
•1232 – எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது.
•1377 – இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார்.
•1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன.
•1790 – கொலம்பியா மாவட்டம் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
•1809 – லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எசுப்பானிய முடியாட்சியில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.
•1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.
•1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனின் உத்தரவின் பேரில், அமெரிக்க ஒன்றியப் படைகள் வர்ஜீனியாவினுள் 25-மைல்கள் தூரம் அணிவகுத்துச் சென்றன.
•1931 – எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் முதலாம் ஹைலி செலாசி வெளியிட்டார்.
•1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
•1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது.
•1948 – 1948 அரபு – இசுரேல் போர்: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாசரேத்து நகரத்தை இசுரேல் ஆக்கிரமித்தது.
•1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.