இன்றைய ராசி பலன் – 16-07-2021

மேஷம்:Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் முன்னேற்றம் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்:Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்:midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரமாக முடிவெடுத்து விடாதீர்கள். நிதானம் அதிகம் தேவைப்படக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பங்களிப்பு அதிகரித்து காணப்படும். விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலும் புதிய பொறுப்புகளை சுமக்க வேண்டி வரலாம்.

கடகம்:Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் சில இடையூறுகள் ஏற்படலாம். தடைபட்ட திருமண முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் நன்றாக அமையும். போக்குவரத்து ரீதியான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருந்து கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்பு கூடும்.

சிம்மம்:simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்து கூட பார்க்காத சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறலாம். சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்தடைய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கன்னி:Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் எல்லாம் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணவிஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

துலாம்:Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் முடிவெடுப்பது வேண்டாம். குடும்பத்தில் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும் வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சுய தொழிலில் இருப்பவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். கவன சிதறல் ஏற்படாமலிருக்க விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம்.

தனுசு:Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும். பொது இடங்களில் உடைமை மீது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் இடையூறுகள் ஏற்படலாம் எனினும் வெற்றி உங்கள் பக்கம் தான்.

மகரம்:Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர கூடிய இனிய நாளாக அமையும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். சுய தொழிலில் புதிய கூட்டாளிகள் கருத்துகளைக் கேட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இனக்கம் தேவை. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

கும்பம்:Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமுடனிருப்பது நல்லது.

மீனம்:meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒளியிழந்த நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கவலைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். பழைய நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

Author: admin