காந்தகாரில் தாலிபன்-ஆப்கன் படை மோதலை படம் பிடிக்க சென்ற இந்திய போட்டோஜர்னலிஸ்ட் டானிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

காந்தகாரில், தாலிபன்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே நடக்கும் போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இந்திய போட்டோஜர்னலிஸ்ட் டானிஷ் சித்திக் கொல்லப்பட்டார்.
ஆப்கன் அரசு படைகளுடன் இருந்து அந்த போரை அவர் படம் எடுத்துக் கொண்டிருந்த போது, தாலிபன்களின் தாக்குதலில் நேற்றிரவு உயிரிழந்தார் என இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் பரீத் மாமுண்ட்சாய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காந்தகாரில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் நடந்த போரில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கன் செய்தி தொலைக்காட்சியான டோலோ (Tolo) தெரிவித்துள்ளது.
சுமார் 45 வயதான டானிஷ் சித்திகி மும்பையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் தலைமை போட்டோஜர்னலிஸ்டாக பணியாற்றி வந்தார். சிறந்த போட்டோஜர்னலிசத்திற்காக அவர் புலிட்சர் பரிசும் பெற்றவர்.
Author: admin