உங்கள் மனதிற்கு பிடித்த வேலை மிக சீக்கிரத்தில் கிடைக்க பைரவருக்கு இப்படி மிளகு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையாக இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் இறை நெறி. செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தால் மட்டும் சரி ஆகி விடுமா? என்று கேட்டால் இல்லை தான். எந்த மனிதனும் தெரிந்தே பாவங்களை செய்வதில்லை. ஒரு சிலர் வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அதற்குரிய தண்டனையை இறைவன் நிச்சயம் அளிப்பார். ஆனால் தெரியாமல் சில பாவங்களை செய்து விடுவோம். அத்தகைய பாவங்களுக்கான பலனாக உங்களது ஜனன ஜாதகத்தில் சில பிரச்சனைகளை இறைவன் வைத்து விடுவான். நாம் நிம்மதியாக வாழ கர்ம வினை குறைய வேண்டும். அதற்காக சில பரிகார முறைகளை கையாள்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

astro-wheel

கர்ம வினையால் நம் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருக்கும். வேலை கிடைப்பதில் பிரச்சனை இருக்கும். தாமதம் ஆகும். கிடைத்தாலும் எதிர்பார்த்த வேலை இருக்காது. பிடித்த வேலை அமையாது. இவ்வாறாக வேலை சார்ந்த விஷயத்தில் தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதை சரி செய்ய சனி பகவானின் குருவான பைரவரை வழிபட வேண்டும். பைரவரை கவனித்தால் போதும். சனி பகவான் மகிழ்வார். கெடு பலன்கள் குறையும். தோஷம் நீங்கும். மனதிற்கு பிடித்த வேலை நிச்சயம் அமையும்.

பரிகாரம்:

சனிக்கிழமை அன்று காலை நீராடி விட்டு சுத்தமான ஆடை அணிந்து கொண்டு 7 மணிக்குள் பைரவர் சன்னதிக்கு சென்று அங்கு சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்சித்து, சிவப்பு நிற பழங்கள் நிவேதனம் செய்து விட்டு ஒரு புதிய அகல் விளக்கு ஒன்றை வங்கி வைத்து கொள்ளுங்கள். அதற்கு மூன்று முகங்களில் சந்தனம், குங்குமம் இட்டு கொள்ளுங்கள். ஒரு கருப்பு நிற சுத்தமான நூல் துணி ஒன்றை சிறிய அளவில் சதுரமாக வெட்டி வைத்து கொள்ளுங்கள். அதில் 27 என்ற எண்ணிக்கையில் மிளகுகளை ஒவ்வொன்றாக போட்டு கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மூட்டை போன்று நன்கு இறுக்கமாக நூல் கொண்டு கட்டி விடுங்கள். மிளகுகள் வெளிய வந்து விடக்கூடாது. பின்னர் அகல் விளக்கில் வைத்து விடுங்கள். இழுப்பை எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். இழுப்பை எண்ணெய் இல்லை என்றால் நல்லெண்ணெய் ஊற்றலாம். மிளகு மூட்டையின் திரியிலும் படும்படி ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் தீபம் ஏற்றி பைரவர் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

milagu-deepam

பைரவர் மூல மந்திரம்:

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்

ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம.

Bairavar

நாம் வேண்டுவது கெடு பலன் குறைந்து நினைத்த வேலை அமைய வேண்டும் என்பதற்காக எனவே இவ்வாறு தீபம் ஏற்றி பரிகாரம் செய்தால் நிச்சயம் சனியின் தாக்கம் குறைந்து மனதிற்கு பிடித்த வேலை அமையும். இது போல் 27 சனிக்கிழமை செய்ய வேண்டும். அதற்குள் மனதிற்கு பிடித்த வேலை கிடைத்து விடும். வேலை கிடைத்து விட்டாலும் தொடர்ந்து செய்தால் நன்மை உண்டாகும்.

Author: admin