அடிக்கடி பணம் செலவாகிக் கொண்டே இருக்கிறதா? கையில் பணமே தங்க வில்லையா? அதுக்கு இது தான் காரணம்! விதியை மதியால் வெல்வது எப்படின்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

பணம் என்பது நிலையில்லாத ஒன்று. கைக்கு கை மாறிக் கொண்டே தான் இருக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமானது உங்கள் கையில் நிலைக்காமல் தொடர்ந்து செலவாகி கொண்டே இருந்தால் உங்களுடைய ஜாதகத்தில் பனிரெண்டாம் இடம் சரியாக அமையவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். விரய ஸ்தானத்தில் உங்களுக்கு வீணாக செலவழிக்க வேண்டும் என்று இருந்தால் அதை எந்த விதியாலும் மாற்ற முடியாது. ஆனால் விதியை மதியால் வெல்ல முடியும் என்பது தான் நியதி. எப்படி நம் கையில் இருக்கும் பணத்தை வீண் விரயம் ஆகாமல் தக்க வைத்துக் கொள்வது? என்கிற சூட்சமத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

jathagam astro

உங்கள் ஜாதகத்தில் ஒரு பாவம் பலவீனமாக இருந்தால், இன்னொரு பாவம் பலமாக தான் இருக்கும். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறந்து தான் இருக்கும். அது எங்கே இருக்கிறது? என்று தான் நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை. அதை தேடுவது மதியால் முடியும். அந்த மதியினை கூர்மையாக எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சில நேரங்களில் வீணாக விரயம் ஆவது போல் தோன்றுகிறதா?

தேவையில்லாத மருத்துவ செலவு ஏற்படுவது, கொடுத்த கடன் திருப்பி வராமல் இருப்பது, தொழில், வியாபார நஷ்டம் ஏற்படுவது, அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் செலவுகள் ஏற்படுவது இப்படி பலவிதமாக உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் வந்து கொண்டே இருந்தால் அதை வீண் விரயம் என எடுத்துக் கொள்ளலாம். நமக்கு எதிர்காலத்திற்கு தேவைப்படாத எந்த ஒரு செலவும் வீண்விரயம் தான். விதிக்கப்பட்ட விதியை எப்பொழுதும் யாராலும் மாற்ற முடியாது. இன்று உங்களுக்கு இவ்வளவு செலவாக வேண்டுமென்று எழுதப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது. சமயோசிதமாக யோசித்து செயல்பட்டால் இப்படியான விதியை கூட வென்று விடலாம் என்கிறது ஜோதிடம். அது எப்படி?

money4

வீணாக செலவு ஆகிக் கொண்டே இருக்கும் சமயங்களில் கடவுளுக்கு அதிகமாக செலவு செய்து பாருங்கள். கடவுளுக்கு செய்யும் செலவானது எப்பொழுதும் செலவு கணக்கில் சேராது. ஆனால் பலரும் இதனை கடைபிடிக்க தவறுகின்றனர். கடவுளுக்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம் பார்த்தால் கடைசி வரை உங்களிடம் பணமானது நிலைக்காது என்பது சூட்சமம். தாராளமாக கடவுளுக்கு செலவு செய்யுங்கள். வீட்டில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வது, கோவில்களில் அர்ச்சனை, ஆராதனை செய்வது, விசேஷங்களில் கலந்து கொள்வது போன்ற பக்தி காரியங்கள் வீண் விரையத்தில் சேர்க்க முடியாது என்பதை நினைவில் கொண்டு தாராளமாக செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள். பணம் தானாகவே வந்து சேரும்.

ஒரு விபத்து ஏற்படுகிறது, அதற்காக வீணாக செலவு செய்கிறீர்கள் என்றால் அந்த விபத்தை தடுத்து நம்மால் நிறுத்த முடியாவிட்டாலும் வாகனங்களை சரியாக பராமரித்து வந்தால் இந்த விபத்து ஏற்படாமல் தடுத்து விடலாம். அது தான் விதியை மதியால் வெல்வது என்பது. உங்கள் வாகனத்திற்கு ஆகும் செலவுகளை கணக்கு பார்க்காதீர்கள், தாராளமாக செலவு செய்து முறையாக பராமரித்து வாருங்கள். ஏதோ ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஏற்படும் விபத்து அல்லது அதன் மூலம் ஏற்படும் வீண் விரயங்களை அது வரவாக்கி காட்டும்.

உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை வீண் விரயமாக ஆகாமல் அதனை அடிக்கடி தானம் செய்து பாருங்கள். இதன் மூலம் புண்ணியம் சேர்ந்து உங்களுக்கு நேர இருக்கும் விபத்துக்கள் மூலம் இழக்க இருக்கும் ரத்தத்தை கூட அது மீட்டுத்தரும். அதாவது புண்ணிய காரியம் செய்தால் உங்களுக்கு நடக்க இருக்கும் விபத்தானது தடுக்கப்படும். அதன் மூலம் ரத்தம் விரயமாவது தடுக்கப்படும். யாரோ ஒருவருடைய உயிரானது நீங்கள் கொடுக்கும் இரத்தம் மூலம் காப்பாற்றப்பட்டால் உங்களுடைய ஆயுள் ஆனது நீடிக்கும்.

blood donation

நோய் வந்து அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளை குறைக்க அடிக்கடி நோயாளிகளுக்கு பண உதவி செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் நோய்வாய்ப்பட்டு கிடந்தால் அப்படியே கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுங்கள். பெற்றோர்களுக்கு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது, உங்களுக்கு உடல் பரிசோதனை செய்து கொள்வது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்தால், அதுவும் தேவையில்லாத விரயம் தான், ஆனால் சுப விரயமாக மாறும். இப்படி வீண் விரயத்தை சுப விரயமாக மாற்றிக் கொண்டால் வர இருக்கும் செலவுகள் கூட நல்ல செலவாக இருக்கும், இதனால் நாம் விதியை மதியால் வென்று காட்ட முடியும்.

Author: admin