சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்

சென்னை: சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவது வீடுகளுக்கு நீர் புகாமல் தடுக்கும் என கூறினார். எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி சாலை போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை என கூறினார்.

சாலை போடும் போதே தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து பணியை தொடர வேண்டும் என கூறியுள்ளார். பல்வேறு இடங்களில் சாலையில் தரம் குறைவாக இருப்ப்தால் அடிக்கடி சாலை போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலை போடும் போது அதற்கான மட்டத்தை சரியான அளவில் போட வேண்டும் என கூறினார். மழைக்காலங்களில் தண்ணீருடன் சேர்ந்து சாலை அடித்து செல்கிறது. ஆகவே மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு தான் சாலை போட வேண்டும் என தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya