இந்த 5 பழைய பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால்! நீங்களும் அதிர்ஷ்டசாலி தான் தெரியுமா? அப்படி என்ன பொருட்கள் அது?

‘ஓல்ட் இஸ் கோல்ட்’ என்பது பழமொழி. எப்பொழுதும் பழைய பொருட்களுக்கும், பழைய விஷயங்களுக்கும் அதிகமான மதிப்பு உண்டு. இன்று பயன்படாத செல்லாத நாணயங்கள் கூட சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிக விலைக்கு ஏலம் விடப்படுகிறது. அது போல நம்மிடம் இருக்கும் பழைய பொருட்களுக்கு அதீதமான சக்தி உண்டு. அப்படி நம்மிடம் இருக்க வேண்டிய முக்கியமான அந்த 5 பழைய பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ammi-kal

தொன்று தொட்டு பழங்காலத்தில் மனிதன் பயன்படுத்திய பல பொருட்கள் இன்று நவநாகரிக உலகத்தில் மாயமாய் மறைந்து போனது என்பது நிதர்சனமான உண்மை. அந்த பொருட்களுக்கு எல்லாம் ஹிந்து சமய சாஸ்திரப்படி அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் ஆற்றலும் உண்டு என்பது தான் உண்மை. அப்படியான பொருட்களை பற்றிய தகவல்களை தான் இனி வரும் பத்திகளில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலாவதாக நம்மிடம் இருக்க வேண்டிய பழைய பொருள் ஒன்று அம்மி. அம்மிக்கல் பழங்காலம் முதல் இன்று வரை பலருடைய வீடுகளிலும் இருந்து வருவது உண்மை தான் என்றாலும் அம்மி என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகளும் இந்த உலகத்தில் இன்று இருக்கத் தான் செய்கின்றார்கள். பழைய பொருளான அம்மி வீட்டில் இருந்தால் வீட்டில் மகாலட்சுமி நிலையாக தங்கி விடுவாள். அதை முறையாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்து அல்லது தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் இன்னும் கூடுதல் பலன் உண்டு.

இரண்டாவதாக நம்மிடம் இருக்கும் பழைய பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உடையாத கண்ணாடி. பழங்காலம் முதல் தொன்று தொட்டு சந்ததி வாரியாக எவருடைய வீட்டில் பழைய கண்ணாடியை பத்திரப்படுத்தி பயன்படுத்தி வருகிறார்களோ அவர்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்களாம். ஆனால் அது உடையாமல், விரிசல் விழாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். உடைந்த கண்ணாடி பொருட்களை எப்பொழுதும் வீட்டில் வைத்திருப்பது தரித்திரம் தான். உடையாமல் இருக்கும் பழங்கால கண்ணாடிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.

பிறகு பழங்கால கடிகாரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் அது கூட உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். காலத்தை கணக்கிடும் கடிகாரத்தை பல ஆண்டுகளைக் கடந்தும் நாம் பயன்படுத்தி வந்தால் அதன் மூலம் நமக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். அது ஓடாமல் இருந்தாலும் பரவாயில்லை, உடையாமல் நல்ல நிலையில் இருந்தால் போதும். இன்று பேட்டரியில் இயங்கும் கடிகாரத்தை போலல்லாமல் முந்தைய காலங்களில் சாவி கொடுத்தால் கடிகாரம் ஓடும். அதெல்லாம் அதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய பழங்கால அபூர்வமான பொருட்கள் ஆகும். அது உங்களிடம் இருந்தால் அதனை எப்போதும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

gold-pot

நம் முன்னோர்கள் பயன்படுத்திய தங்க நகைகள் கூட அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க கூடிய பொருட்கள் ஆகும். இப்போது இருக்கும் தங்கத்தை விட அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய தங்கத்திற்கு நல்ல ஒரு அதிர்வலைகளை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. பழங்காலக் கோவில்களில் காலம் காலமாக பயன்படுத்தி வரும் தெய்வீக நகைகளுக்கு இருக்கும் சக்தியானது அபரிமிதமானது என்று கூறப்படுகிறது. எனவே பழங்கால தங்க நகைகள் உங்களிடம் இருந்தால் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

burma-teak-wood

ஐந்தாவதாக பழைய மரப்பலகைகள், மர வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே மர பொருட்களை பழையது என்று தூக்கி எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது மாற்று வழியில் உங்களுக்கு உபயோகமாக பயன்படுத்தி வாருங்கள், இதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்.

Author: admin