யானைகளின் இடம்பெயர்வு வழிகளை பாதுகாத்தல் அவசியம் -ஆய்வு முடிவில் தகவல்

மனித – விலங்கு மோதலுக்கு தீர்வு காண எதிர்காலத்தில் யானைகளின் இடம்பெயர்வு வழிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என அதுதொடர்பான ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை- நிலம்பூர் யானை ரிசர்வ் பகுதிகளில், யானைகள் பயன்படுத்தும் இடம்பெயர்வு பாதைகள் மற்றும் போக்குவரத்து பாதைகளை ஆவணப்படுத்த யானை ஆய்வாளர், டாக்டர் என்.சிவகனேசனை கோயம்புத்தூர் வனக்கோட்டம் ஈடுபடுத்தியது.
அதில் நிலம்பூர்-கோவை யானை காப்பகத்திற்குள் மொத்தம் 18 யானைகள் இடம்பெயர் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இடம்பெயர் பாதைகளில் பெரும்பாலானவை நெடுஞ்சாலைகளுக்கு குறுக்கே சென்றாலும் யானைகள் பருவ காலங்களைப் பொறுத்தே இடம்பெயர்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
Author: admin