இந்த கிழமையில் இதை செய்துவிட்டு உங்களது வேலையை தொடங்குங்கள். அனைத்திலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது நாம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்யாவும் வெற்றியில் முடிய வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருக்கும். மிகவும் முக்கியமான காரியத்திற்கு சென்றால், அது நல்லபடியாக முடிய வேண்டும் என்று சிலர் அதிகப்படியான சகுனங்களை கூட பார்ப்பார்கள். அந்த சகுணங்களோடு சேர்த்து, இந்த பதிவில் கூறப்போகும் சில டிப்ஸ்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த காரியத்திற்காக வெளியே செய்கிறீர்களோ அந்த காரியம் நிச்சயம் ஜெயம் தான்.

sunday

ஞாயிற்றுக்கிழமை அன்று சுப காரியங்களுக்காக நீங்கள் வெளியே சென்றால், சிறிதளவு வெற்றிலையை உங்கள் வாயில் போட்டு மென்று சாப்பிட்ட பின்பு கிளம்பலாம். உங்களுக்கு வெற்றிலை சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால், ஒரு வெற்றிலையை மடித்து உங்கள் சட்டைப் பையிலோ அல்லது பர்ஸிலோ வைத்துக் கூட செல்வதன் மூலம் நல்ல பலன் இருக்கும்.

திங்கட்கிழமை அன்று சுப காரியங்களுக்காக வெளியே செல்வதாக இருந்தால், உங்களது முகத்தை, உங்கள் வீட்டு கண்ணாடியில் பார்த்து விட்டு செல்வது நன்மை தரும்.

monday

செவ்வாய்க்கிழமை அன்று சுப காரியங்களுக்காக வெளியே செல்வதாக இருந்தால், அனுமனை மனதார நினைத்து வேண்டிக்கொண்டு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை 11 முறை உச்சரித்து விட்டு செல்வது நல்ல பலனை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் வெளியில் செல்வதற்கு முன்பு சிறிதளவு சர்க்கரையோ அல்லது இனிப்பு சுவை மிக்க எந்த ஒரு பொருளானாலும் சரி, அதை வாயில் போட்டுக் கொண்டு செல்வது நல்ல பலனை கொடுக்கும்.

tuesday

புதன்கிழமை அன்று வெளியில் செல்வதற்கு முன்பு புதினா இலை, கொத்தமல்லி இலை அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் எந்த ஒரு பொருள், பச்சையாக சாப்பிட முடியுமோ அதை சாப்பிட்டு விட்டு செல்வது நன்மை தரும். வெள்ளரிக்காய், வெண்டைக்காய் இந்த காய்கறிகளாக இருந்தாலும் பச்சையாக ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு செல்லலாம்.

wednesday

வியாழக்கிழமை அன்று வெளியே செல்வதற்கு முன்பு சிறிதளவு சீரகத்தைப் வாயில் போட்டுக் கொண்டு சென்றால் நல்ல பலன் கொடுக்கும்.

thursday

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றால் மங்களகரமான நாளாகும். இந்த நாள் சுபகாரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள். ஆகவே நீங்களும் சுப காரியத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று செல்வதற்கு முன்பு சிறிதளவு தயிரை சாப்பிட்டு விட்டு சென்றால், அந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.

friday

சனிக்கிழமை அன்று வெளியே செல்வதற்கு முன்பு சிறிதளவு இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு சென்றால், அந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும். இஞ்சியை மென்று சாப்பிட முடியாதவர்கள் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து கூட சாப்பிடலாம்.

saturday

இப்படியாக வெளியில் செல்வதற்கு முன்பு உங்கள் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், மனதில் நினைத்துக்கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள இந்த சிறுசிறு பரிகாரங்களை செய்வதன் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வி அடையாமல் இருப்பதற்கு உங்களின் மன தைரியத்தை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் காரியத்திற்கு, கண்ணுக்குத் தெரியாத தடைகள் ஏதேனும் இருந்தாலும் கூட அதை இந்த பரிகாரங்கள் நிவர்த்தி செய்யும் என்பதை மனதார நம்புங்கள். வெற்றி நிச்சயம்.

Author: admin