பிரதமர் மோடியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்திப்பு ; மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென எடியூரப்பா பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, மாநிலத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்து பேசப்பட்டு வருவது குறித்து கேட்டதற்கு, அதைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று எடியூரப்பா பதிலளித்தார்.
Author: admin