பாலியல் துன்புறுத்தல் வழக்கு : சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம்


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாகக் கூறப்படும் ஆசிரியைகள் 5 பேர் தப்பி ஓடினர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சம்மன் கொடுக்க சென்றபோது வீட்டை பூட்டைவிட்டு சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகள் தப்பியோடினார்கள். அதன்பின்னர் கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுக்க உதவியதாக சுஷில்ஹரி பள்ளி ஆசிரியைகள் காயத்ரி மற்றும் பிரவீனா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பி திங்கள்கிழமை முதல் அவர்களை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருந்தது. தற்போது தப்பியோடிய ஆசிரியைகளை பிடிக்கவும், தலைமறைவாக உள்ள சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Author: sivapriya