வரலாற்றில் இன்று

•64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
•362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.
•1290 – பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.
•1389 – நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.
•1391 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.
•1806 – மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
•1812 – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
•1841 – இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார்.
•1870 – முதலாவது வத்திக்கான் பேரவை திருத்தந்தையின் தவறா வரக் கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.
•1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
•1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
•1925 – இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது
•1942 – செருமனி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.
•1942 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
•1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
•1966 – மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.