உங்களுக்கு திடீர் பணவரவு உரிய நேரத்தில் கிடைக்க இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு சிலருக்கு பொருளாதார பற்றாக்குறை தொடர்ந்து கொண்டே இருக்கும். தினசரி நாட்களை எப்படியாவது கடந்து விடுவார்கள். ஆனால் திடீரென ஒரு நாள் பணத் தேவை இருக்கும். பணத்திற்கு என்ன செய்வது? என்றே தெரியாமல் குழம்பிப் போய் இருப்பர். எந்த வழியிலாவது பணம் நம்மைத் தேடி வராதா? என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் யாரிடமாவது பணத்தைக் கொடுத்து வைத்திருக்கலாம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று இழுத்தடித்து கொண்டே இருப்பார்கள். பணம் மட்டும் வந்த பாடில்லை என்று புலம்பி கொண்டிருப்பீர்கள். அதுபோன்ற ஒரு இக்கட்டான நிலையில் உங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து இந்த சிறிய பரிகாரத்தை செய்வதனால் அந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடமுடியும். என்ன பரிகாரம்? எப்படி செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

praying-hands

வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சுத்தமான கண்ணாடியாலான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த விதமான பாத்திரத்தையும் உபயோகபடுத்தக் கூடாது. எவர்சில்வர், மரத்தாலான பொருள், தங்கம், வெள்ளி, பித்தளை என்று எந்த உலோகத்தையும் இதற்கு பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கண்ணாடி பவுலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிரம்பும் அளவிற்கு கருப்பு எல்லை நிரப்பி விடுங்கள். அதை அப்படியே பூஜை அறையின் வட மேற்கு திசையில் சாமி படங்களுக்கு கீழே வைத்து விடுங்கள்.

பின்னர் எப்போதும் போல் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டு வாருங்கள். ஒவ்வொரு முறை வேண்டப்படும் போதும் உங்களுடைய பிரச்சனைகளை பற்றி முறை இடாமல் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் என்னை காப்பாயாக என்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் நினைத்து எந்த பிரச்சினையும் சமாளிக்கக்கூடிய மனதைரியத்தை மட்டும் அருள்வாயாக என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிரச்சனையே வேண்டாம் என்று வேண்டினால் பிரச்சனை வராமல் இருந்து விடாது அல்லவா? அதில் இருந்து வெளிய வரும் மன தைரியம் தான் நமக்கு தேவை.

ellu

கருப்பு எள்ளானது சனீஸ்வர பகவானின் மனதை குளிர வைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த பொருளாகும். சனிபகவானின் தாக்கத்திலிருந்து ஓரளவு நம்மை காத்து நமக்கு வரும் கெடு பலன்களை இந்த எள் பரிஹாரம் குறைத்து விடும். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருக்கும் பொழுது நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் திடீர் பணவரவு உண்டாகி சரியான தருணத்தில் அந்த பிரச்சனையிலிருந்து உங்களை எளிதாக மீட்டெடுத்து விடும். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

Sani-Bagavan-1

மாதம் ஒருமுறை சனிக்கிழமையில் அந்த எள்ளை ஓடும் ஆற்றில் அல்லது பறவைகளுக்கு உணவாக அளிப்பதன் மூலம் பரிகாரம் நிறைவடையும். உங்களுக்கு பண பிரச்சனை அல்லது மனக்குறை, மீள முடியாத துயரத்தில் இருக்கும் பொழுது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அதிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம். தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு எள் தானம் தீர்வு தரும் என்பதும் இந்த கூற்றின் படி தான். சனீஸ்வரர் நியாயவான். அவரை மனதில் நினைத்து கொள்ளுங்கள். எந்த கஷ்டமும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்.

Author: admin