நெதர்லாந்தில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ; வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வெண்லோ நகர்

நெதர்லாந்தின் மியூஸ் (Meuse)ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெண்லோ (Venlo) நகரின் ஒரு பகுதி மூழ்கியது. கடந்த சில நாட்களாக லிம்பர்க் (Limburg)மாகாணத்தில் கொட்டித் தீர்ட்த்த கன மழையால் மியூஸ் ஆற்றில் நீர் வரத்து வேகமாக அதிகரித்தது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக கரை ஓரங்களில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவத்தினரும், தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
இதனால், அண்டை நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் 150 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி இறந்த போதும் நெதர்லாந்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்பட வில்லை.
 
Author: admin