வரலாற்றில் இன்று

•64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.
•484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.
•998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது.
•1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.
•1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.
•1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.
•1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.
•1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
•1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
•1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
•1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.
•1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.