தள்ளாத வயதில் தண்டவாளத்தில் தவறி விழுந்த முதியவர் ; நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்

மும்பையில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த முதியவர் நூலிழையில் உயிர் தப்பி உள்ளார். இந்த சம்பவம் மும்பை – கல்யாண் ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது.
தள்ளாத வயதில் தண்டவாளத்தை கடந்தபோது, இந்த முதியவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி, கீழே விழுந்து விட்டார். இதனை கவனித்த ரயில் ஓட்டுநர், சமயோசிதமாக அவசர பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய முதியவர், மறுவாழ்வு பெற்றுள்ளார்.
 
 
Author: admin