திருப்பூர்: பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவர் கைது – 3 பெண்கள் மீட்பு

திருப்பூரில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவர் கைது. மூன்று பெண்கள் மீட்ட போலீசார் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூரில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரிலும், வீடுகளை வாடகைக்கு எடுத்தும் பாலியல் தொழில் நடப்பதாக மாநகர காவல் துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர். திருமுருகன் பூண்டி, கூத்தம்பாளையம் ஜே.பி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

image

அப்போது அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், வசந்த் ஆகிய இருவரும் மூன்று பெண்களை ஏமாற்றி வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Author: sivapriya