கோவை: பெண்ணை தாக்கி அவருடைய தந்தையின் இருசக்கர வாகனத்தை எரித்த எஸ்எஸ்ஐ கைது

கோவையில் பெண்ணை தாக்கி, அவருடைய தந்தையின் இருசக்கர வாகனத்தை எரித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் கணவனைப் பிரிந்து வசித்துவரும் பெண் அபிநயா. இவரும் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனும் உறவினர்கள். இவர்கள் இருவருக்குமிடையே பழக்கம் உள்ள நிலையில், இருதினங்களுக்கு முன்னர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அபிநயாவை பார்த்திபன் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு உழவர் சந்தையின் சுவர்ஏறி குதித்து அபிநயாவின் வீட்டிற்கு சென்ற பார்த்திபன், அபிநயா தந்தையின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனை பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

Author: sivapriya