“இந்தியாவுக்காக தன் திறமையை சஞ்சு சாம்சன் நிரூபிக்கவில்லை” – வாசிம் ஜாபர்

இந்தியாவுக்காக தன்னுடைய திறமையை இன்னும் போதிய அளவுக்கு சஞ்சு சாம்சன் நிரூபிக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் நிறைய ரன்களை சேர்த்திருக்கலாம். ஆனால் இந்தியாவுக்காக அவர் தன்னுடைய திறமையை நிரூபிக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவரிடம் ‘கன்சிஸ்டென்ட்’ இல்லை என்ற முத்திரை அவரை பின் தொடர்கிறது” என்றார் அவர்.

image

கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் இப்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் 114 போட்டிகளில் 2861 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 83 ரன்களை எடுத்துள்ளார்.

Author: sivapriya