இந்தியா Vs இலங்கை ஒருநாள் போட்டி: எப்படியிருக்கும் இரு அணிகளும்?

ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கொழும்புவில் இன்று களம் காண்கிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடரில் விளையாட இருக்கிறது. கோலி தலைமையிலான அனுபவம் வாய்ந்த டெஸ்ட் அணி இங்கிலாந்தில் இருப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 11 கொண்ட இரு அணியின் வீரர்கள் யார் யார்? என்பதை சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

image

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான்
பிருத்வி ஷா
சஞ்சு சாம்சன்
மணிஷ் பாண்டே
சூர்யகுமார் யாதவ்
ஹர்திக் பாண்ட்யா
தீபக் சஹார்
புவனேஷ்வர் குமார்
சஹால்
குல்தீப் யாதவ்
நவ்தீப் சைனி

உத்தேச இலங்கை அணி

நிசாங்கா
அவிஷ்கா பெர்னான்டோ
பனுகா ராஜபக்சா
மினோத் பனுகா
தனஞ்சயா டி சில்வா
தசுன் ஷனகா
ஹசரங்கா
இசுரு உதானா
கசுன் ரஜிதா
அகிலா தனஞ்சயா
துஷ்மந்தா சமீரா

Author: sivapriya