இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சால் திணறும் இலங்கை: 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள்


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 25 ஓவர் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அவிஷ்கா பெர்ணான்டோ மற்றும் மினோத் பனுகா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி பொறுமையாக ரன்களை சேர்த்த நிலையில் அவிஷ்கா பெர்ணான்டோ 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி முதல் விக்கெட்டை 49 ரன்களில் இழந்தது. அதன் பின்பு விரைவாக ரன்களை சேர்த்த பனுகா ராஜபக்சா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின்பு மினோத் பனுகா, தனஞ்சயா டி சில்வா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு துணையாக சஹால், குருணால் பாண்ட்யா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 25 ஓவர் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

Author: sivapriya