இந்தியா வெற்றி பெற 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை அணி!


இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் இலங்கையில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது.
தவான் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற 263 ரன்கள் தேவை. இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினாலும் மூன்று பேட்ஸ்மேன்கள் 30 ரன்களுக்கு மேலாகவும், சமிகா கருணரத்னே 43 ரன்களும் எடுத்தனர்.
image
இந்தியா சார்பில் தீபக் சாஹர், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குர்ணல் பாண்ட்யா எக்கானமியாக பந்து வீசினார்.

Author: sivapriya