முன்னாள் இராணுவ அதிகாரி கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை.

Read Time:1 Minute, 18 Second

கடந்த 16 ஆம் திகதி வெலிகம காப்பரதோட பிரதேசத்தில் கூறிய ஆயுதங்களால் தாக்கி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

சம்பவம் தொடர்பில் 29 வயது நபரொருவரை வெலிகம வல்லிவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார், இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் இக் கொலையுடன் தொடர்புடையவர்கள் சந்தேக நபர்களை விபரம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெரியவந்த சந்தேகநபர்கள் நால்வரை போலீசார் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளது என தெரியவந்துள்ளது.

இக்கொலை சம்பவத்தில் 50 வயதான முன்னாள் இராணுவஅதிகாரி மரணம் அடைந்துள்ளார், மற்றும் 52 வயதான நபரொருவர் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Author: admin