ஆபாச வீடியோ அனுப்பியவர்களின் முகவரிகளை கண்டுபிடித்து விட்டேன்- தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பி, அவதூறாக விமர்சித்து வந்த அனைவரின் அடையாளங்களையும், வீட்டு முகவரியையும் கண்டுபிடித்து விட்டதாக, விபரீத தண்டனை வீடியோ வெளியிட்ட தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகாரின் மீது நடவடிக்கை இல்லாவிட்டால், ஆபாச வீடியோ அனுபியவர்களுக்கு தான் ஏற்கெனவே எச்சரித்தபடி தண்டனை கொடுக்க உள்ளதாக கூறினார்.
பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடு பாணி எனக் கூறப்படும் முறையில் பனிஸ்மெண்ட் அளிக்கப்போவதாக ஏற்கெனவே வீடியோ வெளியிட்டிருந்ததையும் வீரலட்சுமி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
Author: admin