கடன் பிரச்சனையா? இளநீர் ஒன்றே போதும். உங்கள் கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொருவர் வாழ்விலும் கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இதற்கெல்லாம் முழு முதற் காரணம் ஆசை. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை பார்க்க வேண்டும். இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனம் இன்றைய நவ நாகரீக மனிதனுக்கு இல்லாமல் போனதே இந்த கடன் பிரச்சனைகளுக்கு காரணம்.

money

முதலில் அடுத்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பதை நிறுத்த வேண்டும். அவன் இதை வைத்திருக்கிறான். இவன் அதை வைத்திருக்கிறான் என்று மனதை அலைபாய விடக்கூடாது. யார் என்ன செய்தால் நமக்கென்ன? நமக்கு கடன் இல்லையா என்று மட்டும் பாருங்கள்.

panakaran

பணம் வைத்திருப்பவன் எல்லாரும் பணக்காரன் இல்லை. கடன் இல்லாமல் எவன் ஒருவன் வாழ்கின்றானோ அவனே செல்வந்தன். அவன் மனதில் நிம்மதி இருக்கும். தூங்கினால் உடனே தூக்கம் வரும். கடன் வாங்கியவன் நிம்மதியாக உறங்க முடியுமா? அவன் மனதில் நிம்மதி தான் இருந்து விடுமா? இவ்வாறான கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் சிறிய பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்ய முடியும். என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

ilaneer-5

தீராத கடன் பிரச்சனைக்கு இளநீர் மூலம் பரிகாரம் செய்து தீர்வு காண முடியும். நல்ல இளநீர் ஒன்றை சீவி வாங்கி கொள்ளுங்கள். அதில் இருக்கும் நீரை பாதியளவு குறைத்துக் கொள்ளுங்கள். பாதியளவு நிரம்பிய இளநீரினுள் நவதானியங்கள் சம அளவில் எடுத்து போட்டு விடுங்கள். இப்போது மேல் பாகத்தை நல்ல வெற்றிலைகளால் மூடி வைக்க வேண்டும். இளநீர் கீழே சாயாமல் இருக்க அடிப்பாகத்தில் அரிசியை பரப்பிக் கொள்ளலாம். வெற்றிலையின் மேல் அகல் விளக்கு ஒன்றை வைத்து கிழக்கு முகமாக பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

சரியாக ஒரு வாரம் தீபம் எரிய வேண்டும். அந்த ஏழு நாட்களில் எண்ணெய் மற்றும் திரியை மற்றும் தினமும் மாற்றி விட வேண்டும். தீபத்தின் ஜோதி சக்தியெல்லாம் அந்த தானியங்களில் முழுவதும் இறங்கிவிடும். தானியங்கள் முளை விட ஆரம்பிக்கும். ஏழாம் நாள் அன்று முளை விட்ட அந்த தானியங்களை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். உலர்ந்த தானியத்தை பொடி செய்து கொள்ள வேண்டும்.

manjal

மஞ்சளில் நனைத்த சுத்தமான துணி கொண்டு அந்த பொடியை அதனுள் போட்டு நிரப்பி நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த சக்தி வாய்ந்த முடிப்பை பூஜை அறையில் வைத்து கடன் பிரச்சனை தீர மனதார வழிபட்டால் கட்டாயம் கடன் பிரச்சனை தீரும். இறை சக்தி வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றி தரும். இப்படி பரிகாரம் செய்தால் நடக்குமா?என்ற எதிர்மறை எண்ணத்தோடு செய்தால் எதுவும் பலன் இல்லை. பிரச்சனை தீரும் என்று நம்பிக்கையோடு முயன்று பாருங்கள். நம்பிக்கையில் தான் எந்த பரிகாரமும் பலன் தரும். செய்யும் செயலில் உறுதியான நம்பிக்கை வைத்தால் எந்த செயலும் வெற்றி தரும். தீராத கடன் தொல்லை படிப்படியாக குறைவதை கண்கூடாக காண முடியும். வீட்டில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். செல்வம் நிலைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வந்துவிடும். எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

Author: admin