இந்த வார ராசிபலன் 19-07-2021 முதல் 25-07-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

மேஷம்:Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை செய்ய முடியாமல் இழுபறியாக இருந்து வந்த சில காரியங்களை, இந்த வாரம் வேகமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவு வந்தால் பொறுமை காப்பது நல்லது. வீண் விவாதம் கூடாது. வேலை செய்யும் இடத்தில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே நல்ல பெயர் கிடைக்கும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைப்பது சந்தேகம் தான். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வியாபாரத்திற்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் அலைச்சல் இருக்கும். சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. சரியான நேரத்தில் தூங்க முடியாது. கொஞ்சம் அலைச்சல்கள் நிறைந்த வாரம் தான் இது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலம் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சம்பள உயர்வும் கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பூர்வீக சொத்து கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தினந்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கடகம்:zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். ஆன்மீக ரீதியான சில விசேஷங்களில் கலந்து கொண்டு மனத்திருப்தி அடைவீர்கள். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடன் வேலை செய்பவர்களுடன் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வரும். அனுசரித்து செல்ல வேண்டும். தடைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்குத்தான். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான மன குழப்பம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றம் வரும். முக்கியமான முடிவுகளை அடுத்த வாரம் தள்ளிப் போட வேண்டும். இந்த வாரம் செய்யக்கூடிய எல்லா விஷயங்களிலும் அதிக கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவால் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிபடக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. உங்களுடைய அறிவு திறமையால் புத்தி கூர்மையால் சில விஷயங்களை, சில வேலைகளை செய்து முடித்து உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நல்ல பாராட்டைப் பெற போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் எதிர்பாராத அளவிற்கு உயரப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் பல வகைகளில் வந்து குவியும். சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

துலாம்:Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் வீட்டில் சந்தோசம்தான் இருக்கப்போகின்றது. தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். குடும்பத்தோடு சேர்ந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. கொஞ்சம் விருப்பம் இல்லாத வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயங்கள் வரும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. வீட்டிலிருக்கும் பெண்கள் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பௌர்ணமி தினம் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நாட்களாக தொடர்ந்து பிரச்சினை கொடுத்து வந்த சிக்கல்கள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது. நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் தொகை வசூலாகும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையும் நிறைவேற போகின்றது. ஆக மொத்தத்தில் இந்த வாரம் மனநிறைவைத் குறைவிருக்காது. உடல்நல ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சொந்தத் தொழிலில் எந்த பிரச்சனையும் இருக்காது. தினந்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

தனுசுDhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமைதியான வாரமாக தான் இருக்கப் போகின்றது. யாராவது வந்து உங்களை வீன் விவாதத்திற்கு அழைத்தாலும், எங்கும் செல்லாமல் அமைதியாக இருக்கவே உங்களுடைய மனம் சொல்லும். ஆன்மீக ரீதியான சில காரியங்களில் உங்களுடைய நேரத்தை செலவழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக பெண்கள் இந்த வாரம் தங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். காரணம் அதிகமாக கோபப்பட்டால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வந்து உறவுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி மனதார 10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.

மகரம்:Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியமான அடிதடி வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் வரும் சமயத்தில் கூட மன உறுதியாக, துணிச்சலாக செயல்பட்டு வெற்றியை உங்கள் பக்கம் சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய இந்த துணிச்சல் உங்களை சுற்றி இருப்பவர்களை மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு இருக்கும். இருப்பினும் துணிச்சலான சமயங்களில் ஒரு கவனம் இருக்க வேண்டும். அதுவே, உங்களுக்கு ஆபத்தாக முடிந்து விடக்கூடாது. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் தேவையற்ற சமயத்தில் வந்து தொல்லை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கி விடுவார்கள். மனக்குழப்பம் உண்டாகும். கொஞ்சம் உடல் சோர்வும் இருக்கும். இருப்பினும் பொறுமை காப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உறவுகள் ரீதியாக பலம் கூடும். இந்த வார இறுதியில் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக இருக்கப்போகின்றது. பல நாட்களாக பிளான் பண்ண ஒரு விஷயத்தை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். மனசு சந்தோஷமாகவும் இருக்கும். உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விட்டு விலகும். மனதில் ஒரு புதிய உத்வேகம் பிறக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற உங்களுடைய எண்ணம், உங்களை வாழ்க்கையில் படிப்படியாக உயர்த்திச் செல்லும். சந்தோஷத்துக்கு குறைவே இருக்காது. குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

Author: admin