வேலூர்: கம்மல், மூக்குத்திக்காக மூதாட்டி கொலை; கொள்ளையர்கள் வெறிச்செயல்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கம்மல் மற்றும் மூக்குத்தியை பறிப்பதற்காக மூதாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷிபுரத்தைச் சேர்ந்த 72 வயதான சரோஜா அம்மாள், அருகே உள்ள வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மூதாட்டியின் அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தியை பறிக்க முயன்றுள்ளனர்.
மூதாட்டி அவர்களுடன் சண்டையிட்டதால் துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொள்ளையர்கள், கம்மல், மூக்குத்தியை கழட்டி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author: sivapriya