கல்லூரிகளில் சேர 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பொன்முடி

பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

இன்று +2 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். மேலும் ஜூலை 31-ஆம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளும் வெளியாகவுள்ளதால் அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 26ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 24-ஆம் தேதிவரை கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Author: admin