காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பு….

Read Time:1 Minute, 16 Second

நேற்று முன்தினம் நாட்டில் காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர், இச் சுற்றிவளைப்பில் சுமார் 14,927 போலீசார் பங்குபற்றியிருந்தனர்,

இச் சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்கள் 431 பேரும் சந்தேகத்தின் பேரில் 431 பேரும் உள்ளடங்குவதாக 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 98 பேரும் போதைப்பொருள் மதுபானம் தொடர்பில் 1,250 பேரும் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பில் 5 பேரும் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 580 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Author: admin