இந்தியாவில் தினசரி கொரோனா இறப்புகள் 500-க்கு கீழ் குறைந்தது

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் தினசரி மரணங்களின் எண்ணிக்கை கடந்த மூன்றரை மாதங்களில் முதல் முறையாக 500க்கு கீழ் குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி நேற்று ஒரே நாளில் 499 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 38,164 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 665 ஆக குறைந்துள்ளது.

Author: sivapriya