வரலாற்றில் இன்று

•70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான்.
•1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார்.
•1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர்.
•1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
•1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் நியெப்சிற்கு வழங்கினார்.
•1810 – பொகோட்டாவின் குடிமக்கள் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
•1831 – செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர்.
•1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.
•1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.
•1917 – முதலாம் உலகப் போர்: யுகோசுலாவிய இராச்சியத்தை உருவாக்கும் உடன்பாடு செர்பிய இராச்சியத்திற்கும் யுகோசுலாவ் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்டது.
•1920 – பாரிசு அமைதி உடன்பாட்டிற்கமைய, கிரேக்க இராணுவம் சிலிவ்ரி நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1923 இல் அந்நகரைத் துருக்கியிடம் இழந்தது.
•1922 – உலக நாடுகள் சங்கம் ஆப்பிரிக்காவில் டோகோலாந்தை பிரான்சுக்கும், தங்கனீக்காவை ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.