இந்த எளிய வீட்டு குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? கரப்பான் தொல்லை முதல் துணி கரை வரை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் 7!

ஒரு சில எளிய விஷயங்களை நாம் தெரிந்து வைத்துக் கொண்டு இருந்தால் நம்முடைய வீட்டு வேலைகளை மிகச் சுலபமாக செய்து விடலாம். இந்த அவசர நவீன யுகத்தில் எதையும் ஆற அமர்ந்து நிதானமாக செய்து கொண்டிருக்க முடியாது. போகிற போக்கில் நமக்கு கிடைத்தவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். இந்த வேகத்தில் செல்லும் போது நாம் இந்த சில குறிப்புகளை தெரிந்து வைத்திருந்தால் பதட்டம் இல்லாமல் பயணிக்கலாம். அப்படியான சில குறிப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

blood-stain-in-cloth

குறிப்பு 1:

திடீரென உங்களுடைய துணிமணிகள் கிரீஸ் கரைகள் அல்லது எண்ணெய் கரை போன்ற விடாப்பிடியான கரைகள் பட்டுவிட்டால் அதனை மிக சுலபமாக போக்கிவிட உங்களிடம் சிறிதளவு நீலகிரி தைலம் இருந்தால் போதும். நாலைந்து சொட்டு நீலகிரி தைலத்தை கரைகளின் மீது தேய்த்து கசக்கினால் கரையெல்லாம் மாயமாகிவிடும்.

குறிப்பு 2:

வீட்டில் இருக்கும் எந்த பகுதியை விடவும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய முக்கியமான பகுதி கழிவறை மற்றும் குளியலறை ஆகும். இங்கு கரப்பான் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் நீங்கள் தூங்க செல்லும் முன் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை ஆங்காங்கே தூவி தேய்த்துவிட்டு செல்லுங்கள். எந்த ஒரு கரப்பான் பூச்சியும் அங்கு எட்டிக்கூட பார்க்காது.

veggitables

குறிப்பு 3:

இப்போது வரும் நவநாகரிக காய்கறிகள் எல்லாம் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட விஷமாகவே கருதப்படுகிறது. இந்த விஷத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை 5 நிமிடம் போட்டு ஊற வைத்து அதன் பின் நீங்கள் காய்கறிகளை நறுக்கினால் அதில் இருக்கும் கிருமிகள் ஒழிந்து போய்விடும்.

குறிப்பு 4:

நாம் பயன்படுத்தும் காலனி அல்லது ஷூக்கள் போன்றவை சில நேரங்களில் நமக்கு ஆபத்தாகவும் முடியும். நீங்கள் கழட்டி வைக்கும் பொழுது அதில் பூச்சிகள் புகுந்துவிடும், அது தெரியாமல் அணிந்து கொண்டு சென்றால் அது உங்களை கடித்து துன்புறுத்த வாய்ப்புகள் உண்டாகும். இதனை தவிர்க்க மூடிய காலணிகள் அல்லது ஷூக்களுக்குள் கொஞ்சம் கற்பூரத்தை தூள் செய்து போட்டு விடலாம்.

meat

குறிப்பு 5:

நீங்கள் அசைவ உணவை சமைத்த பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை அவ்வளவு எளிதாக போக்கி விட முடியாது. இதற்கு சிறந்த தீர்வாக கொஞ்சம் புளியை எடுத்து அந்தப் பாத்திரத்தில் தேயுங்கள். அதன் பிறகு சாதாரண சோப்பு கொண்டு கழுவினால் எந்த விதமான நீச்ச நாற்றமும், துர்நாற்றம் அடிக்காது.

குறிப்பு 6:

நீங்கள் இட்லிக்கு மாவு அரைத்து வைக்கும் பாத்திரம் ஆனது இறுக்கமாக எந்த அளவிற்கு இருக்கிறதோ! அந்த அளவிற்கு அது புளிக்காமல் இருக்கும். காற்று உள்ளே போய் தான் மாவு வெகுவிரைவாக புளிக்கிறது எனவே இறுக்கமான பாத்திரங்களில் மூடி வைக்கும் பொழுது மாவானது விரைவில் புளிக்க வாய்ப்பில்லை.

idly-maavu

குறிப்பு 7:

கடையிலிருந்து வாங்கி வந்த இஞ்சி துண்டுகளை மொத்தமாக அப்படியே வைக்காமல் அதன் கிளைகளை ஒடித்து ஒரு வெள்ளை நிற ஈரத்துணியில் கட்டி நீங்கள் தண்ணீர் ஊற்றி வைக்கும் பானையின் மீது வைத்து விட்டால் போதும்! எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும்.

Author: admin