கர்மவினை நீங்கி வீட்டில் வறுமை ஒழிந்து செல்வம் பெருக உங்களுடைய நட்சத்திரத்திற்கு நீங்கள் வழிபட வேண்டிய முதல் தெய்வம் என்ன தெரியுமா?

அவரவர் செய்த கர்ம வினைப் பயனுக்கு ஏற்ப தான் பாவங்களும், புண்ணியங்களும் வந்து சேர்கின்றன. ஒருவர் கெட்டவராகவே இருந்தாலும் அவர் செல்வந்தராக இருந்தால் பூர்வ ஜென்மத்தில் அவர் செய்த புண்ணியம் அவருக்கு இன்று கை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தமாகும். பாவத்தை செய்து விட்டு நன்றாகத் தானே இருக்கிறார்! என்று நாம் தப்புக் கணக்கு போடக் கூடாது. அவரவர் செய்த பாவத்திற்கு கட்டாயம் தர்மப்படி தண்டனை உண்டு, அதை அனுபவித்து தான் தீர வேண்டும். வேறு மாற்று வழி கிடையாது. இந்த வகையில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கர்ம வினைப்பயனை குறைத்துக் கொள்ள நம்முடைய நட்சத்திரத்திற்கு நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

stars

27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாக இருக்கும் அஸ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வுகள் நீங்கி செல்வம் கொழிக்க வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர் ஆவார். விநாயகரை வழிபட்டு வந்தால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நியதி.

பரணி, பூரம் மற்றும் பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் ரங்கநாதர் ஆவார். ரங்கநாதரை அடிக்கடி வணங்கி வந்தால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் செல்வம் மற்றும் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம்.

ranganathar perumal

கிருத்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது மற்றும் அவருக்கு வெண்ணை சாற்றி, ஸ்ரீ ராம நாமம் ஜெபிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி செல்வம் கொழிக்கும்.

ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நிச்சயம் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகி நிறைய நன்மைகள் உண்டாகும். திங்கட்கிழமை தோறும் விரதமிருந்து சிவ வழிபாடு செய்வது பாவங்கள் நீங்க வழிவகுக்கும்.

sivan-temple

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகு கால துர்க்கை பூஜை செய்து வர அவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். தடைபட்ட அத்தனையும் வெற்றி அடையும். பாவங்கள் நீங்கி குடும்பத்தில் வறுமை ஒழிந்து செல்வம் மென்மேலும் பெருகும்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பைரவ வழிபாடு செய்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். பகைவர்கள் தொல்லை ஒழியவும், பாவங்கள் நீங்களும் பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்து பாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்.

swarna-bairavar3

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகவேந்திரரை வழிபட்டு வாருங்கள், நிறைய நன்மைகள் உண்டாகும். மனித ரூபத்தில் வாழ்ந்து வந்த இவரை நீங்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஈசன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பிரதோஷம் ஆகிய விசேஷ தினங்களில் சிவ வழிபாடு செய்வது என்பது கூடுதல் பலன்களை கொடுக்கும். அவர்களுக்கு உரிய அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.

Perumal

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமாளை வழிபட்டு வர போராட்டமெல்லாம் தணியும். நீங்கள் எதற்காக போராடிக் கொண்டு இருக்கிறீர்களோ! அத்தனையும் நிறைவேறும், அற்புத மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் வறுமை நீங்கி படிப்படியான முன்னேற்றம் கண்டு செல்வம் செழிக்க தொடர்ந்து பெருமாளை வணங்கி வருவது உத்தமம்.

Author: admin