எச்ஐவி பாதித்தவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் ; தமிழக சுகாதாரத்துறை

முறையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்ஐவி மற்றும் கொரோனா தொற்றுடன் மருத்தவமனையில் அனுமதிக்கபடுபவர்களில் 23 சதவீதம் பேர் மரணம் அடைந்தது ஆய்வில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. இந்தியாவின் மொத்த எச்ஐவி பாதிப்பில் 7 சதவீத பேர் தமிழகத்தில் உள்ளனர் என்றும் 1.55 லட்சம் பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
Author: admin