இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகும் ’ஒப்போ ரெனோ 6 புரோ 5ஜி’ – சிறப்பம்சங்கள் என்னென்ன?


இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன். ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் இந்த போன கிடைக்கும் என தெரிகிறது. 5ஜி செக்மெண்டில் பல்வேறு செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் ரெனோ 6 புரோ 5ஜி அதில் புதுவரவாக இணைந்துள்ளது.
ஆண்ட்ராய்ட் 11 பேஸ்ட் கலர் இயங்கு தளம் 11.3 வெர்ஷனில் இந்த போன் இயங்குகிறது. 6.55 இன்ச் ஃபுல் HD AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமான்ஸிட்டி 1200 SoC, 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ரியர் சைடில் நான்கு கேமரா, 65 வாட்ஸ் சாரஜிங் மூலம் 31 நிமிடத்தில் 100 சதவிகித சார்ஜ் செய்யும் வசதி, 4500mAh பேட்டரி, 32 மெகாபிக்ஸல் செல்பி கேமரா என சிறப்பம்சங்களில் இந்த போன் அசத்துகிறது.
image
மிகவும் ஸ்லிம் மாடல் சைஸ் போன் இது. இதன் எடை 177 கிராம். Bokeh Flare Portrait Video வசதியும் இதில் உள்ளது.

Author: sivapriya