ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மாநிலத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு பக்கம் முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பது, மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்துவது என தமிழக அரசு முழுமூச்சாக நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

தமிழகத்தில், முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்தாலும், நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கை மீறி பொதுமக்கள் வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றி வருகிறார்கள்

இந்நிலையில், அமலபடுத்தப்பட்ட ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் கடுமையாக முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பங்கேற்றுள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya