நம் கையை விட்டு வெளியே சென்ற பணம் மீண்டும், திரும்ப திரும்ப நம் கைக்கு வரவே ஆசைப்படும். பணத்தை இப்படி செலவு செய்து பாருங்கள்!

பணத்தை செலவு செய்யாமல் அப்படியே பூட்டி வைத்து இருந்தோமே ஆனால் அதனால் நமக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. பணம் இருந்தும் பயனில்லாமல் இருப்பது எதற்கு. பணத்தை நாம், நம்முடைய பயன்பாட்டிற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். செலவு செய்த பணம் மீண்டும் மீண்டும் விரும்பி வேறு வகையில் வருமானமாக நம் கைக்கு திரும்பக்கூடிய தாந்திரிக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தாந்த்ரீக பரிகாரங்கள் அத்தனையுமே முழு நம்பிக்கையோடு முழுமனதோடு செய்தால் நிச்சயமாகப் பலன் அளிக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ‘இப்படி செய்து விட்டால் பணம் கைக்கு வந்து விடுமா!’ என்று இதை செய்தால் நிச்சயம் பலிக்காது. உழைக்காமல் வெறுமனே இருந்து கொண்டு ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றாலும் இந்த பரிகாரம் பலிக்காது. அன்றாட வாழ்க்கையில் இதை ஒரு நம்பிக்கையோடு சேர்த்து வழக்கமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது உங்களுடைய பண பரிமாற்றத்தில், பணம் புழக்கத்தில் ஒரு நல்ல வித்தியாசம் தெரியும்.

வசம்பு! பணத்தை வசியப்படுத்துவதில் இந்த வசந்துக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. இது பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். பணம் வைக்கும் பெட்டியில் வசம்பை வைத்தால் நல்லது. இதேபோல் ஒரு வசம்பை உங்களுடைய பர்சிலோ அல்லது பேக்கட்டிலோ வைத்துக் கொள்ளுங்கள். பணம் வைக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்தால், முதலில் உங்கள் கை வசம்பை தொடவேண்டும். வசம்பை தொட்ட உங்கள் கைகளால் பணத்தை எடுத்து செலவு செய்யுங்கள்.

card

இதேபோல் வெளியிடங்களுக்கு செல்கிறீர்கள். மளிகை கடைகளில் ஒரு 1000 ஆயிரம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்குகிறீர்கள். கார்ட் வைத்து தேய்க்க கூடாது. உங்கள் கையில் இருக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கடைக்காரருக்கு கொடுக்க வேண்டும். எப்படி கொடுக்க வேண்டும்? ‘முதலில் உங்கள் பாக்கெட்டில் அல்லது பர்சிலோ இருக்கும் வசம்பை ஒரு முறை உங்கள் கைகளால் தொட்டு விட்டு, அதன் பின்பு ஆயிரம் ரூபாயை எடுத்து மனதார ‘இப்போது நான் செலவு செய்யும் இந்தப் பணம் வேறு வகையில் வருமானமாக எனக்கு திருப்பி வந்து விட வேண்டும்.’ என்று சொல்லி அதன் பின்பு அந்த பணத்தை மளிகை பொருட்கள் வாங்கியதற்காக கொடுக்க வேண்டும்.

மறைவாக உங்கள் பர்சில் வைத்திருக்கும் வசம்பை தொட்டுக் கொள்ளுங்கள். யார் கண்ணுக்கும் தெரிந்துவிடக் கூடாது. நீங்கள் மனதில் நினைப்பதும் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது. பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கும் 30 செகண்ட்ஸ் போதும் இப்படி செய்ய.

money4

இப்படி பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் எவ்வளவு தொகையை செலவு செய்தாலும் வசம்பினை தொட்ட கைகளால் அந்த பணத்தை செலவு செய்யும் போது, அந்த பணம் உங்கள் வசமாகி விடும். அந்தப் பணம் திரும்பி உங்களிடமே வேறு வகையில் வர வேண்டும் என்று நினைக்கும் உங்களுடைய எண்ணம் அந்த பணத்தை மீண்டும் வேறு ஏதாவது ஒரு வகையில் உங்கள் கையிலேயே கொண்டு வந்து சேர்க்கும்.

vasambu

உங்களுடைய நல்ல எண்ணத்தை பலிக்க வைக்க வேலையை இந்த பிரபஞ்சம் பார்த்துக் கொள்ளும். இதை மட்டும் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்களை விட்டு சென்ற பணம் மீண்டும் ஏதோ ஒரு வகையில் உங்கள் கைக்கு வருவதை உங்களால் நிச்சயம் சில நாட்களிலேயே உணர முடியும். நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயத்தை கடைபிடிப்பதில் பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Author: admin