உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க இதில் ஏதாவது ஒரு வழியை பின்பற்றினால் கூட போதும்.

நமக்கு ஏதாவது ஒரு வழியில் வருமானம் அதிகமாக வரும் சூழ்நிலையில் அந்த பணத்தை மண்ணிலோ அல்லது பொன்னிலோ போட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதாவது அந்தப் பணம் வீண் விரயம் ஆகாமல் நிலமாக வாங்கி வைப்பது நல்லது அல்லது தங்கமாக வாங்கி வைப்பது நல்லது என்பது இதன் பொருள். நம் முன்னோர்களின் கூற்று என்றும் பொய்யாகாது. மகாலட்சுமியின் அம்சம் என்று கூறப்படும் தங்கத்தை நம் வீட்டில் அதிகப்படியாக சேர்த்துக் கொண்டே இருக்க பலவகைப்பட்ட பரிகாரங்கள் இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு பரிகாரத்தை மனதார தொடர்ந்து நாம் பின்பற்றுவதன் மூலம் ஒரு நல்ல பலனை அடைய முடியும். நமக்கு தங்கம் மேலும் மேலும் சேருவதற்கான சில வழிமுறைகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் மனதிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதை நீங்கள் பின்பற்றினால் போதும் நிச்சயம் உங்களது வீட்டு தங்கமானது சேர்ந்து கொண்டே இருக்கும்.

gold-rate

முதலில் நாம் தங்க நகைகளை வாங்கும்போது முழுமனதோடு உங்கள் மனதிற்கு பிடித்த தங்க நகைகளை வாங்க வேண்டும். தங்கம் வாங்கிய போது உங்களுக்கு இருக்கும் சந்தோஷத்தை விட, அதை அணிந்து கொள்ளும்போது உங்கள் மனது அடையும் சந்தோஷமானது அதிகமாக இருக்கவேண்டும். வேண்டாவெறுப்பாக வாங்கிய தங்கத்தை அரைகுறை மனதோடு அணிந்து கொள்வதன் மூலம் எந்த ஒரு பயனும் இல்லை. இதன் மூலம் உங்களுக்கு மேலும் மேலும் தங்கம் பெறுவதில் தடை உண்டாகும். இதனால் ஒரு குண்டுமணி தங்கம் வாங்கினால் கூட உங்கள் மனதிற்கு பிடித்த தங்க நகைகளை வாங்கி அணிந்து கொள்வது மிகவும் சிறந்தது. அதேபோல் நீங்கள் பாரம்பரியமாக எந்த கடையில் நகை வாங்குகிறார்களோ அதே கடையில் தொடர்ந்து நகையை வாங்குவது மிகவும் நல்லது.

gold-4

அடுத்ததாக, வாங்கிய தங்க நகையை அணிந்து கொள்வதற்கு முன்பு குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டு, அந்த தங்க நகையை முதன்முதலாக உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்த்துவிட்டு பின்பு அந்த நகையை பெரியவர்கள் பயன்படுத்திக் கொள்வது மிகவும் சிறந்த ஒரு நல்ல வழி.

gold1

நீங்கள் தங்க நகையை வைத்திருக்கும் பெட்டியாக இருந்தாலும், பீரோவாக இருந்தாலும் அந்த இடத்தில் நிச்சயம் சிவப்புநிற துணியின் மேல் தான் தங்க நகைகளை வைக்க வேண்டும். சில கடைகளில் தங்க நகைகளை வாங்கும்போது, தங்க நகை வைத்திருக்கும் பெட்டியின் உள்பகுதியில் சிகப்பு நிற வெல்வெட் துணியானது இருக்கும். இதற்கு காரணம் சிகப்பு நிற துணியில் தங்க நகைகளை வைத்தால் மேலும் மேலும் சேரும் என்பதுதான். உங்களால் முடிந்தால் சிவப்பு நிற பட்டுத் துணியில் தங்க தங்க நகையை வைப்பது மிகவும் சிறப்பான ஒன்று.

Gold-5

உங்களிடம் இருக்கும் தங்க நகைகளை உபயோகப்படுத்தாமல் பூட்டியே வைத்திருப்பது சிறந்தது அல்ல. உங்களால் முடிந்த வரை 6 மாதத்திற்கு ஒரு முறையாவது அந்த நகைகளை எடுத்து ஒரு நாளாவது உபயோகப்படுத்தி திரும்பவும் வைப்பது மிகவும் நல்லது. சில பேர் தங்க நகைகளை வாங்கி யாருக்கும் தெரியாமல் லாக்கரில் வைத்து பூட்டி விடுவார்கள். அப்படி ஒருநகை இருக்கிறதா என்று கூட நினைவு இருக்காது. நகையை பயன்படுத்தாமல் அப்படியே பூட்டி வைப்பது நல்லது அல்ல. நம் காது, கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை அழுக்கோடு இருக்கக்கூடாது. முடிந்தவரை அவைகளை அழுக்கு சேருவதற்கு முன்பு சுத்தப்படுத்தி அணிந்து கொள்வது மிகவும் சிறந்தது. தங்க நகைகளை அனாவசியமாக அடுத்தவர்களுக்கு இரவல் கொடுக்கும் செய்யாதீர்கள். இரவல் வாங்கவும் செய்யாதீர்கள்.

gold3

இதையெல்லாம் தாண்டி யாரையும் ஏமாற்றி எந்த ஒரு பொருளையும் வாங்கி சேர்க்காதீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானத்தில் வாங்கும் பொருளானது மேலும் மேலும் சேரும் என்பதும் உறுதியான ஒன்று.

Author: admin