67 சதவீத இந்தியர்கள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் – ஐசிஎம்ஆர்

67 சதவீத இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய 4வது கட்ட செரோசர்வேயில் தெரியவந்துள்ளது.
நாட்டில் 70 மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் 6 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ரத்த அணுக்களின் ஆய்வு எனப்படும் செரோசர்வே நடத்தப்பட்டது. அதன்படி, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு நபர்களுக்கு பெருந்தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.
எனினும் 40 கோடி மக்கள் இன்னும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Author: admin