வீட்டில் மகாலட்சுமி அருள் கிடைக்க, மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சுலபமான பரிகாரம் இதோ.

நம் வீட்டில் எந்த ஒரு சுபகாரியங்கள் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் மிகவும் அவசியமானது. மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றிருக்கும் ஒரு வீடானது சகல சௌபாக்கியத்தையும் பெற்றிருக்கும். எந்த ஒரு வீட்டில் சண்டை சச்சரவுகள், ஆரோக்கியம் குறைவு, பணப்பற்றாக்குறை சுபகாரியத் தடை இவைகள் இருக்கின்றதோ அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். சில பேரது வீட்டில் பணமானது தேவைக்கு அதிகமாக இல்லை என்றாலும், மன நிம்மதியும், ஆரோக்கியமும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் வாசம் செய்கின்றாள் என்பதும் தான் அர்த்தம். சில பேரது வீட்டில் தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கும். ஆனால் மனநிம்மதி, ஆரோக்கியம், சந்தோஷம் ஒரு துளி அளவு கூட இருக்கவே இருக்காது. இப்படிப்பட்ட வீட்டிலும் மகாலட்சுமி வாசம் செய்ய வில்லை என்பதுதான் அர்த்தம். அதாவது ஒரு வீட்டில் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணமும், சந்தோஷமான மனமும் எந்த வீட்டில் பரிபூர்ணமாக இருக்கின்றதோ அந்த இடம்தான் மகாலட்சுமிக்கு விருப்பமான இடம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சகல சௌபாக்கியம் தரும் அந்த மகாலட்சுமியை நிரந்தரமாக நம் வீட்டிலேயே குடி வைக்க நாம் ஒரு சுலபமான வழி முறையை பின்பற்றலாம்.

lakshmi

பெரும்பாலானோர் வீடுகளில் அழகிற்காக பித்தளை அண்டிவடிவில் இரண்டு கைபிடிகளை வைத்த பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பூக்களை போட்டு வைத்திருப்பார்கள். அந்தப் பாத்திரத்தை அட்சய பாத்திரம் என்று கூறலாம். அந்த அட்சய பாத்திரத்தை வைத்தே இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த அக்ஷய பாத்திரம் ஆனது உங்கள் வீட்டில் இருந்தால் அதை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம் இல்லாதவர்கள் புதிதாக ஒரு பாத்திரத்தை வாங்கிக் கொள்ளவேண்டும் அந்தப் பாத்திரம் முழுவதும் சுத்தமான தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். நிரப்பப்பட்ட அந்தத் தண்ணீரில் சிறிதளவு பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு பத்திலிருந்து பதினைந்து துளசி இலைகளை அந்த நீரில் போட்டு விட வேண்டும். ஐந்து ஏலக்காய்களையும் தோலுடன் தட்டி அந்த தண்ணீரில் போட்டுவிடவேண்டும்.

kajalakshmi

பன்னீர், துளசி இலை, ஏலக்காய் இவைகள் கலந்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பாத்திரத்தை எடுத்து நம் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்துவிடவேண்டும். வடகிழக்கு மூலையில் வைக்க இடவசதி இல்லாதவர்கள் சற்று வடக்கு திசை நோக்கியும் வைத்துக்கொள்ளலாம். வேறு எந்த திசைக்கும் இந்தப் பாத்திரத்தை தள்ளிவைக்க வேண்டாம்.

thulasi-chedi-3

இந்தப் பாத்திரத்தை வைக்கும் இடமானது நல்ல காற்று வசதியுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தண்ணீரில் இருந்து வரும் நறுமணமானது வீடு முழுவதும் பரவி நல்ல நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை ஈர்க்கும் சக்தியானது இந்த தண்ணீரில் கலந்திருக்கும் பொருட்களுக்கு அதிகமாகவே உள்ளது. இதனால் நம் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைவதை நம்மால் உணர முடியும். வாரம் ஒரு முறை இந்த பாத்திரத்தில் இருக்கும் நீரை மரத்தடியில் கொட்டிவிட்டு, புதியதாக தண்ணீர் ஊற்றி புதிய துளசி இலைகள் ஏலக்காய் போட்டு கொள்ளலாம்.

Author: admin