“தோனி அண்ணனுக்காக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும்” – சுரேஷ் ரெய்னா விருப்பம்

தோனிக்காக இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வெல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர் “தோனியும் நானும் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிக்காக நிறையப் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். சிஎஸ்கேவுக்காக நானும் அவரும் ஏறக்குறைய 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறோம். நான் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எனக்கு மூத்த சகோதரரை போன்றவர். அவரிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவரும் என் மீது அன்பு வைத்திருக்கிறார்” என்றார்.

image

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா “இருவரும் இணைந்தே நிறையப் போட்டிகளை வென்று இருக்கிறோம், தோற்று இருக்கிறோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை குறைந்ததே இல்லை. அதனால் இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேவுக்காக வென்று தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கிறது” என்றார் சுரேஷ் ரெய்னா.

கேப்டன் தோனி 2010,2011, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். அவர் தலைமையிலான சிஎஸ்கே அணி தொடர்ந்து பயணித்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin