வரலாற்றில் இன்று

•கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
•230 – முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
•365 – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
•905 – இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.
•1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.
•1718 – உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
•1774 – உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.
•1798 – நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன.
•1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.
•1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.
•1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.
•1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
•1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.
•1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி சப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகத்து 10 இல் இது நிறைவடைந்தது).
•1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
•1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
•1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
•1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.
•1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.