இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு


இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 276 ரன்கள் தேவை. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை வெல்லும்.
இலங்கை அணிக்காக தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னான்டோ மற்றும் அசலங்கா அரை சதம் அடித்தனர். அதன் மூலம் இந்த ரன்களை இலங்கை அணி சாத்தியப்படுத்தியுள்ளது. சமிகா கருணரத்னே 33 பந்துகளில் 44 ரன்களை குவித்தார்.
பிருத்வி ஷா, தவான், இஷான் கிஷன் என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செம பார்மில் இருப்பது இந்திய அணியின் பலம். அதே போல சூர்யகுமார் யாதவ், ஹர்திக் மற்றும் குர்ணல் பாண்ட்யா இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கையாக ஜொலிக்கின்றனர்.

Author: admin