விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்த பெசோஸ்

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் முன்னாள் சீஇஓ ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணித்துள்ளார்.

ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேருடன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது. ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது மூதாட்டி வாலிஃபங்க் உட்பட 4 பேர் இந்த விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது.  3,600 கி.மீ வேகத்தில் பறந்த ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்து பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது.

image

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் 

கடந்தவாரம் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்று பூமிக்குத் திரும்பிய நிலையில் தற்போது ஜெஃப் பெசோஸ் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

Author: admin